சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து முரசொலி நாளிதழ் அலுவலகம், அண்ணா அறிவாலயத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் உரு வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Related Stories: