கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுமி படுகாயமடைந்து மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: