கிருஷ்ணராயபுரத்தில் மோட்டார் பாசனம் மூலம் பருத்தி சாகுபடி

*விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் பாசனம் மற்றும் மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.பருத்தி உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.இந்தியா 1.7 மில்லியன் ஹெக்டருக்கு மேல் பருத்தி செகுபடி செய்கிறது.

மேலும் இந்தியா 159 நாடுகளுக்கு 5.5 மில்லியன் பொதிகள் பருத்தியை ஏற்றுமதி செய்கிறது. குஜராத், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. ஆவணி- புரட்டாசி பட்டம் எம்.சி.யூ 5, எம்.சி.யு 5 வீடி, சுவின், டி.சி.எச்.பி 213, எம்.சி.யூ 12, எம்.சி.யூ 13, சுரபி, சுமங்கலா, சுருதி தை – மாசி பட்டம் எம்.சி.யு 7. எஸ்.வி.பி.ஆர். நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும்.

குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5மீ இடைவெளியில் ஒரு திசையில் உழுதல் அவசியம். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழுதல் வேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

தண்டுக் கூன் வண்டு தாக்குதலை தவிர்க்க மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் ஹெக்டருக்கு வேப்பம்பிண்ணாக்கு 250கிலோ இட வேண்டும். உயிர் உரம் பயன்படுத்துவதால் 25% தழைச்சத்தை சேமிப்பதுடன், மகசூலையும் அதிகரிக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 100 மிலி 70 சதம் வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அமில நேர்த்தி செய்யவேண்டும்.

இதன்மூலம் விதைகளின் மேற்பரப்பில் உள்ள துசும்புகளையும், பூச்சிகளின் முட்டைகள், நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.
விதை நேர்த்தி செய்ய பிளாஸ்டிக் பக்கெட் (அ) கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துதல் வேண்டும். உலோக பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது.

அடியுரம் இடவில்லையெனில், விதைத்த 25 நாள் உரமிவும். ரகங்களுக்கு 50 சதம் தழைச்சத்தும் மற்றும் சாம்பல் சத்தும், முழு அளவு மணி சத்தை அடியுரமாக இடவும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாள் இடவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு தழைசத்தை மூன்று முறையாக அடியுரம், 45 மற்றும் 60 நாள் இடவும். உரங்களை பட்டையாக மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் மேலிருந்து இட்டு மண்ணுடன் கலந்திட வேண்டும்.

ஹெக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைச் சாலில் தூவவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடுகள். துத்தநாகக் குறைபாடுள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 50 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். பயிர் வளர்ச்சியின் போது குறைபாடு தென்பட்டால் 0.5 சதம் துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 45, 60 மற்றும் 75 நாட்களில் தெளிக்கவேண்டும். மக்னீசியம் குறைபாடு உள்ள நிலங்களுக்கு எக்டருக்கு 20 கிலோ மக்னீசியம் சல்பேட்டு இடவேண்டும்.

விதை நேர்த்தி செய்த விதைகளை பஞ்சு நீக்கிய விதையாக இருப்பின் எஸ்விபிஆர்.3 மற்றும் எம்.சி.யு.? இரகம் எக்டருக்கு 7.5 கிலோவும், மற்ற இரகம் எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படும் அமிலநேர்த்தி செய்யாத விதையாக இருப்பின் எஸ்விபிஆர்.3 மற்றும் எம்.சி.யு.7 இரகம் எக்டருக்கு 15, மற்ற இரகம் எக்டருக்கு 25 கிலோ விதையினை உபயோகிக்க வேண்டும்.

எம்.சி.யு.7 மற்றும் எஸ்.லி.பி.ஆர்.3 போன்ற இரகங்களை நிலம் மெழுகு பதமாக இருக்கும்பொழுது 60 x 30 செ.மீ. இடைவெளியில் சதுர மீட்டருக்கு ஐந்து செடிகள் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும். அமிலம் நீக்கிய விதையாக இருந்தால் குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் மூன்று செ.மீ. ஆழத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.

எக்டருக்கு 12.5 கிலோ என்ற அளவில் வேளாண் துறையால் தயாரிக்கப்படும் நுண்ணூட்டக் கலவையைசுமார் 40 கிலோ மணலுடன் கலந்து இடுவும்.விதைத்த 10 நாட்களுக்குள் இடைவெளியை நிரம்ப வேண்டும். இருபது நாட்களுக்குள் குத்துக்கு ஒரு செடி இருக்குமாறு பயிர் கலைதல் வேண்டும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.

Related Stories: