‘வுஷு’ சாம்பியன்ஷிப் போட்டியில் மருத்துவக்கல்லூரி மாணவி இரட்டை வெண்கல பதக்கம் வென்று அசத்தல்

 

தஞ்சாவூர், ஜுன் 2: அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ‘வுஷு’ சாம்பியன்ஷிப் போட்டியில் மருத்துவக் கல்லூரி மாணவி இரட்டை வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த மே 4 முதல் மே 9ம் தேதி வரை காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ‘வுஷு’ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 150 பல்கலைக்கழகங்களும், சுமார் 1,500 விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவியான வேதாஸ்ருதி சண்முகவடிவேல் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக மாணவி வேதாஸ்ருதி, தாவ்லு பிரிவில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி பின்வரும் பதக்கங்களைப் பெற்றார்.

நந்தாவ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் என்ற மாணவியை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்தினர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வேதாஸ்ருதியின் சிறந்த சாதனைக்காக அவரைப் பாராட்டியதோடு, எதிர்கால சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் வெற்றி பெற வாழ்த்தினர்.

 

Related Stories: