புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்டத்தில் செவிதிறன் குறையுடையோருக்கன அரசு உயர்நிலை பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் விடுதியுடன் கூடிய செவிதிறன் குறையுடையோருக்கன அரசு உயர்நிலை பள்ளியானது தமிழ் நாடு அரசால் நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பயின்ற சிறப்பாசிரியர்கள் மூலமாக சிறப்பான கல்வி, தரமான உணவு, சீருடை, அதிநவின தொழில்நுட்ப கருவி, கணிணி ஆய்வகம், சிறந்த கல்வி உபகரணம் மூலம் கற்றல் கற்பித்தல், ஆண்டுக்கு ஒருமுறை கல்வி சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை என அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களை உரிய பாதுகாப்புடன் பார்த்துகொள்ள விடுதியில் துணை விடுதி காப்பாளர், சமையலர், ஆயாக்கள், இரவு காவலர்,ஆகிய பணியாளர்கள் உள்ளனர்.இப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசு துறையில் பணியாற்றுகின்றனர்.
அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குருப் 2 குருப் 2A ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று அரசு அலுவலர்களாக உள்ளனர். இப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்பைபயன்படுத்தி செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை புதுக்கோட்டை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலை பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.பள்ளி சார்ந்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்ட முகவரி, தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்வதி தலைமை ஆசிரியை, செவிதிறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சட்டமன்ற அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை-622001, தொலைபேசி .7904982673, 94499933468, 04322-226337.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா,தெரிவித்துள்ளார்.
