தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

 

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 8 செ.மீ மழை பதிவானது. தற்போது மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் லட்சததீவு வரை மத்திய மேற்கு, தென்மேற்கு மற்றும் குமரிக் கடல் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.

அதேபோல், வளி மண்டலத்தில் மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஜூன் 3 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், ஜூன் 3 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்பும் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாயப்புளளது. அதிகபட்ச வெப்பநிலை 38-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-25″ செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்

 

 

Related Stories: