சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். நுங்கம்பாக்கம், வேலூர், மதுரை நகரம் தலா 104, திருத்தணி, திருப்பத்தூர், திருச்சி, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. ஈரோடு, கரூர் பரமத்தி, கடலூரில், நாகை, மதுரை விமான நிலையம் தலா 101, காரைக்கால் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
