புதுச்சேரி: புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை வெயில் காரணமாக, ஏப்.27ம்தேதி முதல் மே 31ம்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1ம்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுவையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் கோடை விடுமுறை ஜூன் 3ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஜூன் 4ம்தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வரும் 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
