பஸ்சின் கியர் பாக்ஸ் மீது அமர்ந்து டிரைவரை கொஞ்சிய இளம்பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

 

கோவை: தனியார் பஸ்சில் கியர் பாக்ஸ் மீது அமர்ந்து டிரைவரை கொஞ்சிய இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை சிவானந்தா காலனியில் இருந்து ராமநாதபுரம் பகுதிக்கு தினமும் 5ம் நம்பர் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாட தேவைக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 5ம் நம்பர் தனியார் பஸ் நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றுக் கொண்டு டவுன் ஹால் பகுதியில் இருந்து சிவானந்தா காலனியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த பஸ்சில் ஏறிய இளம்பெண் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கைக்குச் செல்லாமல், நேராக டிரைவரின் இருக்கைக்கு அருகே கியர் பாக்ஸ் மீது அமர்ந்து உள்ளார்.

அந்த இளம்பெண் பஸ் சென்று கொண்டு இருக்கும் போது, டிரைவரிடம் மிகவும் நெருக்கமாக அமர்ந்து சிரித்துப்பேசி கொஞ்சியபடி வந்து உள்ளார். இதனால் டிரைவருக்கு கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பயண காட்சியை பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: