கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ரூ.5க்கு மீன்சாப்பாடு அறிமுகம் செய்து முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ ஆட்சி அமைந்துள்ளது. தற்போது பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று அறிவித்தார். அதன்விவரம் வருமாறு:
* மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறையிலிருந்து பிரித்து, தனியாக ஒரு ‘ஆயுஷ்’ துறையை அமைக்கப்படும்.
* இன்று முதல், ‘அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
* பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது.
* மேற்குவங்கத்தில் புதிதாக அமைக்கப்படும் சுமார் 400 பிரத்யேக உணவகங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள் ரூ.5 விலையில் மீன் மற்றும் சாதம் அடங்கிய உணவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
