மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வாயிலில் இருந்த டிரான்ஸ்பார்மர் அகற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி பெரியமேட்டுத்தெரு பகுதியில், புத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வாயிலில் மாணவர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையில் டிரான்ஸ்பார்மர் இருந்து வந்தது.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வந்தனர். எந்நேரத்திலும் உயிர் பலிக்கு காத்திருந்த டிரான்ஸ் பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் நட வடிக்கை எடுக்காமல் இருந்தது.

இந்த நிலையில் புத்தேரி ஊராட்சி சார்பில், டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்திட மின்வாரிய அலுவலகத்தில் விண் ணப்பித்து அதற்கான தொகை செலுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி வாயிலில் இருந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகால கோரிக்கை நிறைவடைந்த மகிழ்ச்சியில், பகுதி மக்கள் டிரான்ஸ்பார்மருக்கு பூஜை செய்து, திருஷ்டி கழித்து இனிப்பு வழங்கினர்.

Related Stories: