கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது

 

வாடிப்பட்டி: மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (37). கார் ஷோரூம் மெக்கானிக். கடந்த அக்டோபர் மாதம் பிளஸ் 2 மாணவியான 17 வயது சிறுமியின் வீட்டிற்குள், பெற்றோர் இல்லாத நேரத்தில் முத்துமணி சென்றுள்ளார். சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர், இதை வெளியே சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, நடந்தவை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அவரை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடந்த பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை நிலவரம் தெரிந்தது. இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து மெக்கானிக் முத்துமணியை கைது செய்தனர்.

* தூத்துக்குடியில் பெண் கூட்டு பலாத்காரம்

தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வந்தார். அப்போது அவரை பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்பவர் தனது பைக்கில் மீன்பிடி துறைமுகம் அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு மோகித், அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது செல்போன், ரூ.2500, இரு வெள்ளி மோதிரங்களை பறித்துச் சென்றதாகவும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்தோணிராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19), ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: