வீட்டுக்குள் புகுந்து மாணவிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை: போக்சோவில் கைது

 

வாடிப்பட்டி: வீட்டிற்குள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (21). இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். தற்போது தவெக கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்த மாணவி கூச்சலிட்டார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் வந்தது தெரிந்து, கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். இதைத்தொடர்ந்து மாணவியின் தாய், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தவெக நிர்வாகி கண்ணனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: