சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனீ ஆகிய 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்ட காங்கேயத்தில் 9 செ.மீ மழையும், திருச்சி நந்தியாறு, பெரம்பலூர் செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் தல 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
