பெ.நா.பாளையம், மே 25: கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சாமநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெஜெ நகர் பகுதியில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்துக்கு இடமாக பேசியதால் அவரை போலீசார் காவல் நிலையம் கூட்டி வந்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 270 கிராம் அளவு கொண்ட கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில், ஜேஜே நகர் பகுதியில் உள்ள ஒரு பவுன்டரியில் தொழிலாளியாக வேலை செய்ததும், சொந்த ஊர் பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் ஹாரிசக் பகுதியை சேர்ந்த சிவகன் கேவட் மகன் சூட்டு கேவட் (33) என்றும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
