கோவை, மே 18: பிரபல டயர் நிறுவனம் ஆண்டு தோறும் ‘ஆப் ரோடு’ பந்தயங்களை நடத்தி வருகிறது. மேடு, பள்ளங்கள் நிறைந்த பாதைகளை உருவாக்கி அதில் போட்டிகளை நடத்தி வருகிறது.
இதில் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் இந்தப் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதற்காகவே மேடு, பள்ளங்கள், சரிவுகள், குறுகிய வளைவுகள் கொண்ட கரடு முரடான பாதைகள் வடிவமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பைக் சாகச வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறுவர்களும், சிறுமிகளும் இப்போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் சாகச வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேடு பள்ளங்களில் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
