பெரியார் அறிவுலகம் விரைவில் திறக்க எதிர்பார்ப்பு

 

கோவை, மே 19: கோவையில் பெரியார் நூலகம் விரைவில் திறக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் ‘பெரியார் நூலகம், அறிவியல் மையம்’ கட்டும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவங்கப்பட்டது. ரூ.245 கோடி கட்டுமான பணிகளுக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டன.

கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் மொத்தம் 6.98 ஏக்கரில் தரைத்தளம் உள்பட 7 தளங்களுடன் இதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு பெரியார் அறிவியல் மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை இடம் பெறுகின்றன. நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

Related Stories: