கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி அளிக்க கோவை நண்பரை தேடும் 84 வயது முதியவர்

 

கோவில்பட்டி, மே 20: கோவை நண்பரிடம் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி அளிப்பதற்காக 84 வயது கோவில்பட்டி முதியவர் தேடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வஉசி நகரை சேர்ந்தவர் பரமசிவன் (84). கட்டிட தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். கோவையைச் சேர்ந்த இவரது நண்பர் பால்சாமி கோவில்பட்டி கருவாட்டு பேட்டையில் கருவாட்டுக்கடை வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தேவைக்காக ரூ.3 ஆயிரத்தை பால்சாமியிடம் கைமாற்றாக பரமசிவன் வாங்கி உள்ளார். அதில் ரூ.1500 திருப்பிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஆண்டுகள் ஓடி விட்டன. பரமசிவனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து விட்டார். இதனால் பரமசிவன் மற்றும் பால்சாமி இருவர் இடையே தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

Related Stories: