கோவை மாநகராட்சி நீர்நிலைகளில் சிறப்பு தூய்மை பணி

 

கோவை, மே 23: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில் உள்ள வார்டு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வழிகாட்டுதலின் படி, தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை திருவிழா விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தூய்மை பணிகள் கடந்த 18-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இப்பணிகள் வரும் மே 31ம் தேதி வரை நடக்கிறது. இந்த தூய்மை பணிகளில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல், மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 ன் படி கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவு, மற்றும் சிறப்பு கழிவுகளை பிரித்து வழங்குதலின் அவசியம் தொடர்பாக பொதுமக்களுக்கு மற்றும் மொத்த கழிவுகளை உருவாக்குபவர்களுக்கு, விரிவாக எடுத்துரைத்தல் மற்றும் பொதுமக்கள் அவரவர் வீட்டிலேயே மக்கும் கழிவுகளை உரமாக்குதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: