நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தில் 3 சிறார்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்கள் சுடலைக் கண்ணு, ஆனந்த பாண்டி மற்றும் இச்சம்பவத்தையே அறியாத உளவுப் பிரிவு காலவர் ஆகிய மூவரையும் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
