சென்னை: புதிதாக நேற்று பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகா விவரங்களை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. புதிய அமைச்சர்களின் இலாகா விவரம்:
* முதல்வர் விஜய் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல் துறை, உள்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டத்துறை, இளைஞர்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல். (ஏற்கனவே வழங்கப்பட்ட துறையுடன் வறுமை ஒழிப்பு துறை சேர்க்கப்பட்டுள்ளது.)
* என்.ஆனந்த் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், நீர்வளத்துறை, (ஏற்கனவே இருந்த வறுமை ஒழிப்பு திட்டத்துறை முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.)
* என்.நிர்மல்குமார் மின்சார துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறை துறை, ஊழல் தடுப்பு துறை, ஆளுநர், தேர்தல், பாஸ்போர்ட் (கூடுதலாக இருந்த சட்டப்பேரவை செங்கோட்டையனுக்கு மாற்றப்பட்டுள்ளது.)
* கே.ஏ.செங்கோட்டையன் (ஏற்கனவே அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது நிதி துறைக்கு பதில் வருவாய் துறை, மாவட்ட வருவாய் உருவாக்கம், துணை கலெக்டர்கள், பேரிடர் மேலாண்மை, நிலம், கிராம நத்தம் மற்றும் சட்டப்பேரவை ஒதுக்கப்பட்டுள்ளது.)
