சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மாவட்ட தலைமையகம் மற்றும் பிற மருத்துவமனைகளின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிளினிக் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட 8000 விண்ணப்பங்கள் உள்ளன. இதை தற்போது எளிமைப்படுத்த இருக்கிறோம். புகைப்படம், வீடியோ எடுத்து இணையதளத்தில் விண்ணப்பம் செய்தால் 1 வருடத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்படும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு 5 வருடத்திற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
சிறுநீரக முறைகேடு தொடர்பாக மீண்டும் முழு மூச்சில் விசாரணை நடக்கும். இந்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும், நியாயம் கிடைக்கும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தவிர யாரும் ஆய்வு நடத்தக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
