காஞ்சிபுரத்தில் டெண்டர் விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பம் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிக்கான டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட 2 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

டெண்டர் அறிவிப்பு மே 12 முதல் 19 வரை கோரப்பட்டு காஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. விதிப்படி மே 12 முதல் ஒப்பந்ததாரர்கள் பதிவிறக்கம் செய்ய ஒப்பந்த புள்ளி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக மே 18ம் தேதி ஒப்பந்தப்புள்ளி உருவாக்கி மே 19ல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

டெண்டர் அறிவிப்பு மே 12 முதல் 19 வரை கோரப்பட்டிருந்த நிலையில் இந்த விதி மீறல் கண்டுபிடிக்கப்பட்டு 2 அலுவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: