10-ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் எப்போது.!!

சென்னை:தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனிடையே தற்காலிக மதிப்பெண் பட்டியல் எப்போது வழங்கப்படும், விடைத்தாள் நகலுக்காக எப்போது விண்ணப்பிக்கலாம் என்பன உள்ளிட்ட தகவல்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் 22.05.2026 முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலுக்காக 22.05.2026 முதல் 27.05.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல துணை தேர்வுக்காக 26.05.2026 முதல் 09.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. துணை தேர்வு 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும் இன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்காக 17.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Related Stories: