சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவியர்கள் 4,35,247 பேர் மற்றும் மாணவர்கள் 4,35,396 பேர் தேர்வு எழுதினார்கள்.
இதில் மொத்தம் 8,21,105 (94.31%) பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவியர்கள் 4,19,891 (96.47 %) மற்றும் மாணவர்கள் 4,01,214 (92.15 %). தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பொதுதேர்வினை விட 2026 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.51% கூடுதலாக உள்ளது.
இதில் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,467 ஆகும். மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,490 மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,977 ஆகும்.
மேலும் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,171 ஆகும். 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 8,233.. 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,931 மற்றும் 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,436 ஆகும்.
பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்:
அரசு பள்ளிகள் 91.86%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%, இருபாலர் பள்ளிகள் 94.42%, பெண்கள் பள்ளிகள் 96.42% மற்றும் ஆண்கள் பள்ளிகள் 88.50% என தேர்ச்சி சதவீதத்தை காட்டியுள்ளன. பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.92% கூடுதலாகவும் , இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஆண்கள் பள்ளிகளை விட 5.92% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன.
