ஈரோடு, மே 20: ஈரோட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கிழக்கு தொகுதியில் 21ம் தேதியும், மேற்கு தொகுதியில் 22ம் தேதியும் திமுக ஆய்வு குழுவினர் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஈரோடு மணல்மேட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தேர்தல் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய ஈரோடு மாவட்டத்திற்கு திமுக மாநில கொள்கைபரப்பு செயலாளர் சிவி எம்பி எழிலரசன், மாநில மாணவரணி துணை செயலாளர் மன்னை சோழராஜன் ஆகியோரை நியமித்து, கட்சியினர் தங்களின் எண்ணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திமுக தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
