சென்னிமலை,மே19: சென்னிமலையில் வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி சாலைேயாரம் உள்ள வனப்பகுதிக்குள் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப்பகுதி 696 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது ஆகும். சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தெற்கே காங்கயம் ரோட்டில் சுமார் 1 கிமீ தூரத்திற்கும், ஊத்துக்குளி ரோட்டில் மேற்கே பழனியாண்டவர் கோயில் வரை சுமார் 7 கி.மீ தூரத்திற்கும் வனப்பகுதி நீண்டுள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வன பகுதிகளில் சிலர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வந்தனர். இதனால் வனத்துறையினர் இரவு,பகலாக கண்காணித்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களை கையும், களவுமாக பிடித்து அபராதம் விதித்து வந்தனர்.
