ரத்லம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு ரயில் நேற்று முன்தினம்(மே 15) புறப்பட்டு சென்றது. இந்த ரயில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள லூனி ரிச்சா மற்றும் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலின் பி-1 ஏசி பெட்டியிலும், அத்துடன் இணைக்கப்பட்டிருந்த எஸ்எல்ஆர் இருக்கை மற்றும் சரக்கு பெட்டியிலும் தீ விபத்து ஏற்பட்டது. பி-1 பெட்டியிலிருந்து புகை வருவதை உடனே கவனித்த ரயில் காவலர், ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தந்தார். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு, ரயிலின் மேல்நிலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த பெட்டியிலிருந்த 68 பயணிகள் பத்திரமாக வௌியேற்றப்பட்டனர்.
