×

டெல்லியில் சிஎன்ஜி காஸ் விலை மீண்டும் உயர்வு

 

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரமான என்சிஆர் பகுதியில் கடந்த 15ம் தேதி சிஎன்ஜி காஸ் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிஎன்ஜி காஸ் விலை கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விலை உயர்வின் காரணமாக, டெல்லியில் இதுவரை விற்கப்பட்டு வந்த விலையிலிருந்து உயர்ந்து, இப்போது ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.80.09 க்கு விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சிஎன்ஜி ஒரு கிலோவுக்கு ரூ.3 அளவில் விலை உயர்ந்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் முதல்முறையாக சிஎன்ஜி விலை 80 ரூபாயை கடந்துள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலைமை எப்போது சீராகும் என்றும் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,New Delhi ,NCR ,
× RELATED டெல்லி மெட்ரோவில் கூடுதல் ரயில்கள்...