×

எரிபொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு டெல்லி தனியார் நிறுவனங்களில் ஒர்க் ப்ரம் ஹோம்: அரசு அறிவுறுத்தல்

 

புதுடெல்லி: எரிபொருள் பயன்பாடுகளை குறைக்கும் விதமாக டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைப்பிடிக்க டெல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தியதால், கச்சா எண்ணெய் எடுத்து செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி “டெல்லியில் உள்ள அரசு ஊழியர்கள் வாரத்துக்கு 2 நாள்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். வாரம் ஒருமுறை கார் பயன்படுத்தாத நாளை பின்பற்ற வேண்டும். வாரமொருமுறை அனைவரும் மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்” என்பன போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை டெல்லி முதல்வர் ரேகா குப்தா கடந்த 14ம் தேதி வௌியிட்டிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுகுறித்து நேற்று வௌியான தொழிலாளர் துறை ஆலோசனையில், “உலகளாவிய சூழ்நிலையில், எரிபொருள் மற்றும் சிஎன்ஜியை சேமிப்பது மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வது அவசியம்.

தேசிய எரிபொருள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அனைத்து முதலாளிகளும், ஐடி போன்ற நிறுவனங்களும் வாரத்துக்கு இரண்டுநாள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். அலுவலக நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அத்துடன், ஊழியர்களை பொதுப்போக்குவரத்து, கார்பூலிங் அல்லது மோட்டார் வாகன பயன்பாடு அல்லாத போக்குவரத்து முறைகளை கடைப்பிடிக்க ஊக்குவிக்க வேண்டும். பயண செலவுகளை குறைக்க மெய்நிகர் அல்லது ஆன்லைன் சந்திப்புகளை ஊக்குவிக்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags : Delhi ,New Delhi ,Delhi government ,US ,Israel ,Iran ,
× RELATED டெல்லி மெட்ரோவில் கூடுதல் ரயில்கள்...