- திருமலா
- ராமச்சந்திரய்யா
- எர்ரசத்யம் காலனி
- ஜட்சர்லா
- தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம்
- வைஷ்ணவி
- ஹைதெராபாத்
- ஹைதராபாத்...
திருமலை: தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரில் உள்ள எர்ரசத்யம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரய்யா. இவரது மகள் வைஷ்ணவி(22). இவர் சில மாதங்களுக்கு முன்பு, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றினார். அப்போது ஐதராபாத்தைச் சேர்ந்த வாலிபர் தேஜா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்திய தேஜா, தன்னை காதலிக்கும்படி அடிக்கடி வைஷ்ணவியிடம் கூறியுள்ளார். ஆனால் வைஷ்ணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வைஷ்ணவிக்கு தனது சொந்த ஊரில் உள்ள பள்ளியில் வரவேற்பாளராக வேலை கிடைத்து பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து வைஷ்ணவிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் செய்தனர். இதனை அறிந்த தேஜா, ஜட்சர்லா கிராமத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வைஷ்ணவியை வழிமறுத்த தேஜா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அவரை தேஜா பின்தொடர்ந்து சென்று கத்தியால் வைஷ்ணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதற்கிடையில் தப்பியோடிய தேஜாவை அப்பகுதி மக்கள் விரட்டிசென்றனர். நசுருல்லாபாத் சாலை அருகே அவரை பிடித்து கைகளை கட்டி கற்களால் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்து மயங்கி விழுந்த தேஜாவை போலீசார் மீட்டு மகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
