இபிஎஸ் ஆதரவாளர்கள் 52 பேர் மீது வழக்குப்பதிவு

 

 

விழுப்புரம் அதிமுகவில் சி.வி. சண்முகத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ஏற்கனவே நகர செயலாளராக இருந்த பசுபதிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரம் காந்திசிலை அருகே ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன், நகரமன்ற உறுப்பினர் கோல்டுசேகர் உள்ளிட்ட அதிமுகவினர் திரண்டு வந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டைமுருகன், கோல்டுசேகர் மற்றும் 40 ஆண்கள், 10 பெண்கள் உள்பட 52 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: