மது அருந்தியதாக குற்றச்சாட்டு எப்பிஐ இயக்குனர் காஷ்படேல் மறுப்பு

நியூயார்க்: மது அருந்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை எப்பிஐ இயக்குனர் காஷ்படேல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  அமெரிக்காவில் எப்பிஐ இயக்குனர் காஷ்படேல் பணியின்போது மது அருந்தியதாக பத்திரிகை செய்தி வெளியானது. இது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது செனட்டர் கிறிஸ்வான் ஹோலன் காஷ் படேலிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவரை காஷ்படேல் கடுமையான சாடினார். பணியில் இருக்கும்போது தான் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாகவும் சில சமயங்களில் தனது ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றிலும் பொய்யானவையாகும் என்று மறுப்பு தெரிவித்தார்.

Related Stories: