பாங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா(76) நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து பிரதமராக கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தக்ஷின் சினவத்ரா பதவி வகித்து வந்தார். இவரது ஆட்சி மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதனால், வௌிநாடுகளில் இருந்தவாறே, தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய தக்ஷின் சினவத்ரா, உச்ச நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், முந்தைய ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வயது மூப்பு, உடல்நிலை மற்றும் சிறையில் நன்னடத்தை ஆகிய காரணங்களால் தக்ஷின் சினவத்ரா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
