சைபர் அட்டாக்கில் இருந்து தப்பிக்க சாட் ஜிபிடியில் புதிய அம்சம் அறிமுகம்

ஹேக்கிங் (Hacking), பிஷிங் (Phishing) மற்றும் இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் புதிய வசதி சாட் ஜிபிடியில் சேர்க்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் மக்களிடையே அதிகரித்துள்ளது.. பல ஏஐக்கள் இருந்தாலும் சாட்ஜிபிடி (chatgpt) முன்னிலை வகிக்கிறது. ஓபன் ஏ.ஐ. நிறுவனம் தனது சாட் ஜி.பி.டி. மற்றும் கோடெக்ஸ் (Codex) பயனர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹேக்கிங் மற்றும் பிஷிங் (Hacking & Phishing) போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு இது விருப்பத் தேர்வாக (opt-in) வழங்கப்படுகிறது.

இந்த புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டவுடன், வழக்கமான பாஸ்வேர்ட் லாகின் (Password Login) முறைக்கு பதிலாக பாஸ் கீ வசதியை வழங்க உள்ளனர். மேலும் சந்தேகமான நடவடிக்கைகளை தடுக்கும் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி, பயனர்களின் தனியுரிமையையும், கணக்கு பாதுகாப்பையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Related Stories: