ஹோர்ஹாட்: அசாமில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாமின் ஜோர்ஹார்ட் மாவட்டத்தில் திதாபோர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கஜான் பகுதியில் காங்கிரஸ் தொண்டரான ரூபாலி தாஸ் என்பவரது வீடு அமைந்துள்ளது. வீட்டின் அருகிலேயே அவர் ஓட்டல் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் உணவகம், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் தீயில் கருகி நாசமாகின. திங்களன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களில் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும். இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
