5 மாநில சட்டமன்ற தேர்தல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்குபதிவு

 

புதுடெல்லி: பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பெருமளவு வாக்குபதிவானது. ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்தனர் என்பது தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் கேரளம்,தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில்,293 தொகுதிகளை மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிகபட்சமாக 93.71 % வாக்குகள் பதிவானது. இந்த மாநிலத்தில் மொத்தம் 6.81 கோடி வாக்காளர்களில் 6.38 கோடிக்கும் அதிகமானோர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்கு 93.8 % பதிவாகியுள்ளது. இது ஆண்களின் 92.06 % விட சற்று அதிகமாகும். தமிழ்நாட்டில் 5.74 கோடி வாக்காளர்களில் கிட்டத்தட்ட 4.8 கோடி வாக்குகள் (85.01 %) பதிவாகியுள்ளது. 85.01 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. ஆண்களில் 83.77 % வாக்குப்பதிவாகியுள்ளது. பெண் வாக்காளர்கள் 86.2 % என அதிகமாக பதிவாகியுள்ளது. அசாமிலும் ஏராளமானோர் வாக்களித்தனர். இறுதி வாக்குப்பதிவு 85.74 % எட்டியது. மாநிலத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. பெண் வாக்காளர்கள் 86.53 % வாக்களித்தனர். இது ஆண் வாக்காளர்களிடையே பதிவான 84.95 % விட சற்றே அதிகம்.

கேரளாவில் 78.11 % வாக்குப்பதிவு பதிவானது. அங்கு 2.12 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. பெண் வாக்காளர்களின் பங்கேற்பு 81.17 %, ஆண்களின் பங்கேற்பு 74.9% வும் இருந்தது. புதுச்சேரியில் 89.82 % வாக்குப்பதிவு பதிவானது. யூனியன் பிரதேசத்தில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இங்கும் பெண் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகளவான 91.39 % ஆக இருந்தது.

 

Related Stories: