தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7,91,654 எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,18,724 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,72,930 எழுதினார்கள்.
மேலும், 7,53,694 (95.20%) மொத்தம் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவியர்கள் 4,06,767 (97.00%) மற்றும் மாணவர்கள் 3,47,527 (93.19%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.81% மாணவியர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 2025 பொதுதேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494. அதில் தேர்ச்சி பெற்றோர் 7,53,142, இது 95.03% சதவீதம் ஆகும் . கடந்த ஆண்டு பொதுதேர்வினை விட 2026 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.17% கூடுதலாக உள்ளது.
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீததில் அறிவியல் 96.90%, வணிகவியல் 92.67% கலை 85.19% மற்றும் தொழிற்பாடம் 85.97% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அறிவியல் பாடப்பிரிவு 96.90% தேர்ச்சி பெற்று மற்ற பிரிவுகளை விட முன்னிலையில் உள்ளது.
முதன்மை பாடங்களின் தேர்ச்சி சதவீததில் இயற்பியல் 98.87%, வேதியியல் 98.82%, உயிரியல் 99.49%, கணிதம் 99.12%, தாவரவியல் 98.62%, விலங்கியல் 98.69%, கணினி அறிவியல் 99.84%, வணிகவியல் 97.55%, கணக்குப் பதிவியல் 98.04% மற்றும் வரலாறு 97.90% ஆகிய பாடங்களிலும் மாணவர்கள் மிகச்சிறந்த தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளனர்.
