சென்னை: கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7,91,654 மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, இன்று 08.05.2026 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.
தேர்வு முடிவுகளில் ஈரோடு மாவட்டம் 98.87% பெற்று முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05% பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் 97.63% பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது, திருநெல்வேலி 97.54% பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் 97.50% பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் 98.24% பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் 96.97% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது, திருச்சி மாவட்டம் 96.55% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் 96.15% பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் 96.12% பெற்று ஐந்தாம் இடம் பெற்றுள்ளது.மொத்த பள்ளிகள் எண்ணிக்கையிலும் அரசு பள்ளிகள் எண்ணிக்கையிலும் ஈரோடு மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,855 அதில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 6,811 (76.92%) ஆகும். தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எணிக்கை 250 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 238 (95.20%) ஆகும். தேர்வெழுதிய இரண்டாமாண்டு தனித்தேர்வு எண்ணிக்கை 25,521 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 6,171 (24.18%) ஆகும். பொதுத் தேர்வு தேர்வெழுதிய முதலாம் ஆண்டு தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 20444 அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8491 (41.53%) என முடிவுகளில் தகவல் வெளிவந்துள்ளன.
