நாளை ரேஷன் குறை தீர் முகாம்

பெரம்பலூர்,மே.8: பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் தாலுக்கா, நொச்சியம் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா, நூத்தப்பூர் (வடக்கு) கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, ஒகளுர் (மேற்கு) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பரிமளம் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, புஜங்கராயநல்லூர் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தரராமன் தலைமையிலும் நாளை (9ம் தேதி) சனிக் கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில், பொது மக்கள் கலந்துகொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: