பெரம்பலூர், ஏப். 30: பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மாநில தலைவர் சின்னப்ப தமிழர் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் தேனரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட தலைவர் கவிஞர் இராமர், மாவட்டச் செயலாளர் காமராஜ், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த, புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் பொன். தங்கராசு, வி.சி.க வழக்கறிஞர் மணிமாறன், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் செல்வக் குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
