கோடை மழை பெய்து குளிரும் காலநிலை: கொஞ்சி, கொஞ்சி அழைக்கும் மூணாறு: சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு

 

மூணாறு: கோடை மழை பெய்து குளிர்ந்த காலநிலையில், இயற்கை எழில் கொஞ்சும் அழகால் சுற்றுலாப் பயணிகளை மூணாறு ஈர்த்து வருகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்தின் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். மலைக்குன்றுகளில் மனதை ஈர்க்கும் தேயிலைத் தோட்டங்கள், சலசலக்கும் நீரோடைகள், ஆங்காங்கே அருவிகள் என இயற்கை அழகுக்கு பஞ்சமில்லாத நகராக மூணாறு திகழ்கிறது. இந்த நிலையில், நகரில் கோடை சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

கேரளம் உள்பட வெளிமாநிலங்களில் வெயில் வாட்டி வரும் நிலையில், மூணாறில் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. பகலில் சில சமயம் கோடை மழை பெய்கிறது. மாலை நேரங்களில் ஜில்லென்ற குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாட்டுப்பெட்டி, குண்டளை மற்றும் செங்குளம் அணைக்கட்டு நீர்த்தேக்கங்களில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த சவாரியின்போது காட்டுயானை, காட்டு எருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

Related Stories: