சென்னை: சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென ஆளுநர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை ஆளுநரிடம் உறுதிப்படுத்த வேண்டும். ஆளுநரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது.
