வணிகர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

திருவாரூர்: வணிகர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்திட வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43வது வணிகர்தின எழுச்சி மாநாடு திருவாரூரில் நேற்று நடை பெற்றது. முன்னதாக மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநாட்டு பந்தலில் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வியாபாரிகள் மீதான அதிகாரிகளின் அத்துமீறல்களை தடுப்பதற்கும், கார்ப்பரேட் கம்பெனிகளை அப்புறப்படுத்துகின்ற பணியையும் பேரமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழக தேர்தலில் புதிய கட்சி ஒன்றுக்கு மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். புதிய அரசு அமைந்த பின்னர் முதல்வரிடம் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகள் ஆன்லைன் வர்த்தகங்கள் ஆகியவற்றின் அத்துமீறல்களை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கம் போராடி வருவதால் வணிகர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசு 4 அடுக்கு ஜிஎஸ்டி வரியை 2 அடுக்காக குறைத்ததை போல ஒரே வரியாக மாற்ற வேண்டும். அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகங்களை தடை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: