சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உழைப்பினால் உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் ‘மே தின’ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பின் மகத்துவத்தைப் போற்றுவோம்-போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகளை என்றும் பாதுகாப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
