நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் செல்வி என்பவர் உயிரிழந்தார். பழந்தின்னிபட்டியில் விவசாயி கண்ணன் மகன் 17 வயது சிறுவன் முயல் வேட்டைக்காக நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுத் துப்பாக்கியில் பால்ரஸ் குண்டுகளை சிறுவன் நிரப்பிய போது தவறுதலாக வெடித்ததில் தாய் செல்வி காயமடைந்தார். நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் விவசாயி கண்ணன் மனைவி செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
