×

சென்னை பஸ் மீது லாரி மோதி டிரைவர் பலி: 40 பேர் படுகாயம்

திண்டிவனம்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்கு அரசு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பென்சிகர் (51) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் திண்டிவனம் சலவாதி-திருவண்ணாமலை சாலை சந்திப்பு அருகே நான்கு முனை சந்திப்பு அருகே திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து புதுவை சென்ற லாரி திடீரென சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மீது லேசாக மோதியது. இதில் அரசு பேருந்து சென்டர் மீடியனில் ஏறி எதிர் திசையில் சென்னை செல்லும் சாலையில் சென்றது. அப்போது சென்னையில் இருந்து புதுவை வந்த மற்றொரு லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், லாரி டிரைவர் திண்டிவனம் அடுத்த கிளியனூரை சேர்ந்த சக்திவேல்(25) உயிரிழந்தார். இந்த விபத்தால் திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் 5 கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Chennai ,Marathandam ,Nagercoil ,Kanyakumari district ,Benzikar ,Kodungulam ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...