- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்
- சூலூர்
- தென்சேரி
- மலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில்
- மலைப்பாளையம்
- சுல்தான்பேட்டை பஞ்சாயத்து யூனியன்
- கோயம்புத்தூர் மாவட்டம்
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மலைப்பாளையம் பகுதிகளில் அமைந்துள்ள மிகவும் பழமையான தென்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று தென்சேரி மலை முருகன் கோயிலுக்கு திடீரென வருகை புரிந்தார். பாதுகாவலர்களுடன் மலைப்பாதை வழியாக காரில் மலை மேலே சென்று இறங்கிய அவரை கோயில் பூசாரிகள் வரவேற்றனர். பின்னர், கோயிலை சுற்றி பார்த்த அவர் மந்திரிகிரி வேலாயுத சுவாமி கோயில் மண்டபத்தில் நீண்டநேரம் தரிசனம் செய்தார். தான் கொண்டு வந்த ஜாதகத்தை சுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், வழிபாட்டு தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு உடனடியாக அங்கிருந்து மலையை விட்டு கீழே இறங்கினார். கீழே உள்ள மாரிமுத்து அடிகளார் மடத்திற்கு சென்று அடிகளாரை பார்த்து பேசிய அவர் மடத்திற்கு நிதியுதவி வழங்கினார். பின்னர், கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
