சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நாட்றம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

*வியாபாரிகள் மகிழ்ச்சி

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி வாரச் சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஆட்டு சந்தை நடப்பது வழக்கம்.

அதன்படி நேற்று நடந்த சந்தையில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு வழக்கத்தை விட நேற்று ரூ.50 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: