என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்’ என முரசொலி செல்வம் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்; “திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள். தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!

பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்” எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: